மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!

Bookmark and Share

மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!

விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ஸ்கெட்ச் படம் வெளியாகியிருந்தது. அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும் முடிந்தபாடில்லை. 

இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத்தான். கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் 95%  நிறைவடைந்துவிட்டதாம்.

மேலும் இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படம் சென்சாருக்கு தயாராகிவிடுமாம். இதனால் ஏற்கனவே சொன்னதுபோல் மே இறுதியில் இப்படம் வெளியாவது உறுதி என சொல்லப்படுகிறது. மே 31-ம் தேதி சூர்யாவின் என்.ஜி.கே வெளியாகவுள்ள நிலையில் பெரும்பாலும் அப்படத்துடன் இப்படம் மோதும் என்றே சொல்லப்படுகிறது. 

கடந்த ஆண்டு பொங்கலுக்கு இதேபோல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் விக்ரமின் ஸ்கெட்ச் படமும் மோதியிருந்தது குறிப்பிடத்தக்கது.   


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions