
‘பாண்டியநாடு படத்தில் இணைந்த கூட்டணி மறுபடியும் பாயும்புலி படத்தில் இணைக்கின்றனர் சுசீந்திரன் – விஷால். செப்டம்பர் 4ம் தேதி வெளிவருகிறது பாயும்புலி படம். அண்மையில் விஷால் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி பல சமூக நலப்பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் பல சமூக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்து, இன்று எம்.ஒ.பி கல்லூரி மாணவிகளின் ஆதரவுடன் இணைந்து கால்நடை பாதுகாப்பு மற்றும் பசுக்கொலை தடுப்பு குழு என்னும் பேஸ்புக் பக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் Go Green -ஐ பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் எம்.ஒ.பி கல்லூரியின் வளாகத்தில் ஆறு மரக்கன்றுகளையும் அவர் நட்டினார். விஷால் பேசும்போது, நான் செய்யும் நல்ல விஷயங்கள் விளம்பரத்துக்காக செய்கிறேன் என்று கூறினால் அது தவறு.
நான் இங்கு மாணவர்களோடு இணைந்து கால்நடைகள் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் போது நிச்சயம் மக்களை அது எளிதாக சென்றடையும். நானும் இயக்குனர் சுசீந்திரனும் இணைந்து இயக்கம் மற்றும் நடிப்புக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றை எம்.ஒ.பி கல்லூரி மாணவிகளுக்காக வழங்கவுள்ளோம் என்று கூறினார்.
Post your comment
Related News | |
▪ | சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் - ஜன.13 படப்பிடிப்பு ஆரம்பம் |
▪ | சுசீந்திரன் - விஷால் படத்திலிருந்து விலகிய லட்சுமி மேனன்! |
▪ | மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் விஷால் |
![]() |