தாய்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஸ்வேதா மேனன் காயம்..!

Bookmark and Share

தாய்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஸ்வேதா மேனன் காயம்..!

மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கேரக்டர்களை தானே விரும்பி நடித்துவிட்டுப் போகிறவர்தான் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். அவர் நடித்த 'ரதிநிர்வேதம்' சமீபத்தில் வெளியான 'களிமண்ணு' ஆகிய படங்களில் அதை நிரூபித்தும் காட்டியிருப்பார் ஸ்வேதா மேனன்.

களிமண்ணு படத்திற்காக, ஸ்வேதாமேனன் தனது நிஜமான பிரசவத்தை படமாக சம்மதித்து ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார். . இதற்கு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து படத்துக்கு தடை கேட்டு போராட்டம் நடத்திய சம்பவமெல்லாம் கூட நடந்தது.

தற்போது தமிழில் பாக்யராஜுக்கு ஜோடியாக 'துணை முதல்வர்' படத்திலும், மலையாளத்தில் 'அக்காள்ட மயில்பெண்ணு' ஆகிய படத்திலும் நடித்து முடித்துவிட்ட ஸ்வேதா மேனனுக்கு சின்னத்திரைக்காக தாய்லாந்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது.

பல மாநிலங்களில் இருந்து சில நடிகர், நடிகையர் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சியை படமாக்கும்போது சிறிய விபத்தினால் ஸ்வேதா மேனனுக்கு காயம் ஏற்பட்டது. பெரிய அளவில் காயம் இல்லை என்பதால் உடனுக்குடன் முதலுதவி செய்துகொண்டு படப்பிடிப்பில் ஈடுபட்டாராம் ஸ்வேதா மேனன்.


Post your comment





Related News
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
நித்யா மேனனின் திடீர் முடிவு
காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions