வாலு விவகாரத்தில் சங்கம் உதவவில்லை...! டி.ராஜேந்தரின் வருத்தம்..!

Bookmark and Share

வாலு விவகாரத்தில் சங்கம் உதவவில்லை...! டி.ராஜேந்தரின் வருத்தம்..!

வாலு பட விவகாரத்தில் சிம்பு தரப்புக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. வாலு படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றியடைந்த மேஜிக் ரேஸ் நிறுவனம் சினிமா தொழில் செய்யும் நிறுவனமே அல்ல என்றும், எங்கிருந்தோ வந்த ஒரு நிறுவனம் வாலு படத்துக்கு தடை உத்தரவு வாங்கிவிட்டது. இதை தயாரிப்பாளர் சங்கம் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று வருத்தப்பட்டாராம் டி.ராஜேந்தர்.

இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு நிர்வாகியிடம் கேட்டபோது, சிம்புவை வைத்து படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் அவர் மீது கவுன்சிலில் எத்தனையோ தடவை புகார் கொடுத்துள்ளனர்.

அப்போதெல்லாம் கவுன்சில் பேச்சை சிம்புவோ டி.ராஜேந்தரோ காது கொடுத்து கேட்டதில்லை. இப்போது தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் அவருக்கு ஆதரவாக கவுன்சில் வர வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம் என்று கேட்கிறார்.

கடைசியாக இது நம்ம ஆளு பட விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் புகார் கொடுத்தார். அதற்கும் டி.ராஜேந்தர் இதுவரை விளக்கம் தராமலே இருக்கிறாராம்.


Post your comment





Related News
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சிம்பு படம் டிராப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்
சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions