என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!

Bookmark and Share

என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!

பீப் சாங் விவகாரம் குறித்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அவர்கள் தனியார் டிவி ஒன்றில் விளக்கம் அளித்ததில், “இந்த பீப் பாடல் சினிமாவிலோ, ஆல்பத்திலோ வெளி வராத முழு வடிவம் பெறாத பாடல். 

இந்த பாடலை சிம்பு திரைப்படத்திலோ, மேடை நிகழ்ச்சியிலோ, தெருவிலோ பாடவில்லை. தனிப்பட்ட முறையில் தனி அறையில் டம்மி வார்த்தைகளை போட்டு எழுதப்பட்ட பாடல். பின்னர் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட பாடல் இது. அதை வேண்டுமென்றே, விஷக்கிருமிகள் யாரோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 

சிம்புவிற்கு பெண்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என சதி திட்டம் போட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.இது சத்தியம்.பீப் சாங் விவகாரம் வெளியான போது நான் ஐதராபாத்தில் இருந்தேன்.

திரும்பி வந்த உடன் டிசம்பர் 13ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் சென்று, எங்களுக்கு தெரியாமல் இப்பாடலை இணையதளத்தில் வெளியிட்டது யார் என கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தேன். புகார் அளித்ததற்கான ரசீதை டிசம்பர் 14ம் தேதி அவர்கள் அளித்தனர். 

இந்நிலையில் டிசம்பர் 12ம் தேதி மகளிர் அமைப்புக்கள் கோவை போலீசில் அளித்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டிசம்பர் 19ம் தேதி சிம்புவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த சமயத்தில் சிம்பு வீட்டில் இல்லை. அதனால் அவரது தந்தை என்ற முறையில் நான் கையெழுத்திட்டு சம்மனை வாங்கிக் கொண்டேன்.

இந்த பாடலை சிம்பு வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் மீதான புகார் மனுவை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் தொடர்ந்த வழக்கை டிசம்பர் 17ம் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட் வழக்கு விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதனால் ஆஜராக நாங்கள் அவகாசம் கேட்டதை ஏற்றுக் கொண்டு, அவகாசம் அளிக்க கோவை போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. என்னை நியாயப்படுத்துவதற்காக இதை கூறவில்லை.

ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதாக புகார் கூறினால், அவர் என்ன வார்த்தையை பயன்படுத்தினார் என குறிப்பிட வேண்டியது நடைமுறை. ஆனால் சிம்பு என்ன ஆபாச வார்த்தையை பயன்படுத்தினார் என அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிடவில்லை. 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எதை வேண்டுமானாலும் செய்து விடலாம். அந்த பாடலை சிம்பு தான் இணையதளத்தில் வெளியிட்டார் என நிரூபிக்க முடியுமா? அவர்கள் பதிவு செய்த எப்.ஐ.ஆரிலேயே சட்டரீதியாக சிம்பு மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் குறிப்பிடப்படவில்லை. 

இது திட்டமிட்ட சதி. சினிமா, டிவி போன்றவற்றிகு இருப்பது போன்று இணையத்திற்கு சென்சார் ஏதும் இல்லை. அதனால் அதில் பல அவலங்கள் அரங்கேறுகின்றன.இதை சதி என்று கூறுவதா அல்லது விதி என்று கூறுவதா என்றே எனக்கு தெரியவில்லை. என்னை வாழ வைத்தது, உயர்த்தியது தமிழ் சமுதாயம். 

இது வரை எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் மரப்புப்படி வாழ்பவன் நான். அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து, தமிழ் பண்பாடுபடி வாழ்பவன். பெண்களுக்காகவே கதை எழுதியவன். தாய்மார்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக பல படங்களை எடுத்துள்ளேன். 

யார் மனதையும் துன்புறுத்தும் நோக்கமில்லை. வேண்டுமென்றே சிம்புவின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக மூடி மறைக்கப்பட்ட ஒன்றை தேடி எடுத்து சிம்புவை சிக்க வைத்துள்ளனர்.

பெண்களை தெய்வமாக மதிப்பவன் நான். இப்படி விஷயத்தில் தெரியாமல் என் மகன் சிக்க வைக்கப்பட்டுள்ளான் என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


Post your comment

Related News
தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்?
தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்!
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions