பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா 'வின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு!

Bookmark and Share

பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா 'வின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு!

திரையுலகம் சார்ந்த அகில இந்திய  கூட்டமைப்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் 'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா' (மும்பை) அமைப்பின்  துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில்​ ​'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா 'வின் புதிய நிர்வாகிகள் அண்மையில்  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.  ஆண்டுக்கு ஒருமுறை  நடக்கும் இந்தத் தேர்தலில் தலைவராக திரு டி.பி.அகர்வால் அவர்களும்,செயலாளராக திரு. ரவி கொட்டாரக்கரா அவர்களும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். துணைத்தலைவராக தமிழ்த் தயாரிப்பாளர் திரு.T.சிவாவும்  போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த  ஒருவர்   'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா' வில் பிரதிநிதித்துவம் பெற்று பங்கேற்கும் வகையில் தயாரிப்பாளர் T.சிவா இப்பொறுப்புக்குப் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.  

இவர் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக​ ​30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.இவை மட்டுமல்ல  பிலிம் சேம்பர் என அழைக்கப்படும் 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை'க்கு 2011​-​201​2​-ல் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தவர்.

இவர்  ஏற்கெனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில்  2011-2013-ல் துணைத்தலைவராகவும்,2013-2014-ல் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர். இப்போது  2015-​ 16​ல்​ ​செயலாளராகவும்​ ​இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது..


Post your comment





Related News
தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்?
தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்!
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions