எனக்கே தெரியாமல், எனக்கு குழந்தையா - டாப்ஸி ஆச்சரியம்

Bookmark and Share

எனக்கே தெரியாமல், எனக்கு குழந்தையா - டாப்ஸி ஆச்சரியம்

'காஞ்சனா 2' படத்தின் நாயகி டாப்ஸியைப் பற்றி சில வெளிநாட்டு மீடியாக்கள் டாப்ஸிக்கும் அவருடைய தோழரான (?) வெளிநாட்டு பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போ-வுக்கும் குழந்தை பிறந்ததாக செய்திகளை வெளியிட்டன. அதனால்தான் அவர் அடுத்து நடக்க உள்ள பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் விலகி விட்டார் என செய்திகள் வெளியிட்டன.

ஆனால், உண்மையில் மத்தியாஸ் போ-வின் பேட்மிண்டன் இணை வீரரான கேர்ஸ்டனுக்குத்தான் குழந்தை பிறந்துள்ளது. அதை மீடியாக்கள் தவறாக எழுதி விட்டன. இது பற்றி கேள்விப்பட்ட டாப்ஸி 'எனக்கே தெரியாமல் எனக்கு குழந்தையா' என ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“நான் இப்போது தென்னிந்திய மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். எனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவெல்லாம் நேரமில்லை. மத்தியாஸின் பேட்மிண்டன் இணையான கேர்ஸ்டனுக்கும் அவருடைய மனைவிக்கும் குழந்தை பிறக்க இருப்பதாக எனக்குத் தெரியும்.

எனக்கும் பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. நான் என்னுடைய திருமண ஏற்பாட்டு கம்பெனி வேலைகளில்தான் பிஸியாக இருக்கிறேன். அடுத்து என்னுடைய ரன்னிங்ஷாதி.காம் படத்தின் வெளியீட்டிற்காக மட்டுமே காத்திருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார். 

 


Post your comment





Related News
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions