பேட்மின்டன் வீரருடன் காதலா? டாப்சி விளக்கம்

Bookmark and Share

பேட்மின்டன் வீரருடன் காதலா? டாப்சி விளக்கம்

தமிழ், தெலுங்கில் டாப்சி முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘காஞ்சனா 2’, ‘வை ராஜா வை’ படங்கள் வெளிவந்தன. அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில் டாப்சி காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்மிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி உள்ளன. வெளிநாட்டை சேர்ந்த மத்தியாஸ்போ என்ற பேட்மின்டன் விளையாட்டு வீரரை இவர் காதலிப்பதாக கூறப்படுகிறது.

மத்தியாஸ்போ எங்கு விளையாடினாலும் டாப்சி அங்கு போய் விடுகிறார். இருவரும் அடிக்கடி சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் இணைய தளங்களில் பரவி உள்ளன.

இந்த காதல் கிசுகிசு பற்றி அவர் பதில் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் விழாவொன்றில் பங்கேற்க வந்த டாப்சியிடம் பேட்மின்டன் வீரர் மத்தியாசை காதலிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த டாப்சி காதலிக்கவில்லை என்று மறுக்கவில்லை. மாறாக என் காதல் விஷயம் பற்றி உங்களிடம் ஏன் நான் சொல்ல வேண்டும். என் பெற்றோரிடம் மட்டுமே அதுபற்றி கலந்து பேசுவேன் என்றார். 


Post your comment





Related News
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions