எல்லா புகழும் ராகவா லாரன்சுக்கே! -சொல்கிறார் டாப்சி

Bookmark and Share

எல்லா புகழும் ராகவா லாரன்சுக்கே! -சொல்கிறார் டாப்சி

காஞ்சனா-2 படம் டாப்சியே எதிர்பார்க்காத அளவுக்கு அவருக்கு பெயரையும், புகழையும் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. அதன்காரணமாக அவரை ஏறெடுத்தே பார்க்காமல் இருந்த சில கோலிவுட் டைரக்டர்கள் இப்போது அவரிடம் அவசரகதியில் கதை சொல்லி கால்சீட் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால், தமிழில் மார்க்கெட் சூடுபிடிக்கும் நேரம் என்பதால் கைவசமுள்ள இந்தி படங்களை வேகமாக முடித்து விட்டு தமிழில் முழுநேர நடிகையாக வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார் டாப்சி.

இதற்கிடையே மே1-ந்தேதி வெளியாகும் வை ராஜா வை படமும் தனக்கு இன்னும் ப்ளசாக அமையும் என்றும் எதிர்பார்க்கிறார். இந்த நிலையில், சிலர் காஞ்சனா-2வில் அவரது நடிப்பை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளுவதால், அத்தனை புகழையும் தன்பக்கமே திருப்பிக்கொள்வது நியாயமில்லை என்று நினைக்கிறார் டாப்சி.

அதனால், காஞ்சனா-2 படத்தைப் பொறுத்தவரை என்னை அப்படி நடிக்க வைத்தது ராகவா லாரன்சுதான். அவர் எப்படி சொன்னாரோ அப்படி நான் நடித்தேன். அதனால் அப்படத்தில் இந்த அளவுக்கு எனது நடிப்பு பேசப்படுகிறது என்றால் அதற்கு முழுக்காரணமும்  லாரன்சுதான். அதனால் காஞ்சனா-2 மூலம் எனக்கு கிடைக்கும எல்லா புகழும் லாரன்சுக்கே என்கிறார் டாப்சி.

 


Post your comment





Related News
அந்தர் பல்டி அடித்த ராகவா லாரன்ஸ்; அப்போ மானம் தன்மானம் எல்லாம் பொய்யா?
மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்!
ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்
ராகவா லாரன்ஸின் மகளா இது?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions