இந்தாண்டு 'தல' தீபாவளி தான்!

Bookmark and Share

இந்தாண்டு 'தல' தீபாவளி தான்!

சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கவுள்ள 'தல-56' படம் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கிறது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அஜித், வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவின் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், நித்யா மேனனும் நடிக்க இருக்கின்றனர். கூடவே தம்பி ராமைய்யா, பால சரவணன் ஆகியோர்களும் நடிக்க இருக்கிறார்கள்.

ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தின் படத்தை தயாரிக்கிறார் ஏ.எம்.ரத்னம். மகன் பிறப்பு, மூக்கில் ஆபரேஷன் போன்ற காரணங்களால் இரண்டு மாதம் ஓய்வில் இருந்த அஜித் இப்போது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

அடுத்தமாதம், அதாவது அஜித்தின் பிறந்தநாள் முடித்த ஒருவாரம் கழித்து, மே 7ம் தேதி படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தொடர்ந்து இரண்டு-மூன்று மாதங்களுக்குள் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் சிவா. அதோடு படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டு தீபாவளி விருந்தாக, தீபாவளிக்கு இருதினங்களுக்கு முன்னதாக ஆரம்பம் படம் வெளிவந்தது. அதன்பின்னர் 2014ல் பொங்கல் விருந்தாக வீரம் படம் வெளியானது. இப்போது இந்தாண்டு தீபாவளிக்கு அஜித்தின் படம் வெளியாக இருக்கிறது. ஆக இந்தாண்டு அஜித்தின் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான்...!


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions