அஜித் படத்தை இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யும் அட்லி?

Bookmark and Share

அஜித் படத்தை இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யும் அட்லி?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

இதை உறுதிபடுத்தும் விதமாக நேற்று சென்னையில் நடைபெற்ற CSK vs KKR ஆட்டத்தை இயக்குனர் அட்லி, ஷாருக்கான் அருகில் அமர்ந்து கண்டு களித்தார்.இதனால் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என்ற பேச்சு மேலும் சூடுபிடிக்கத் துவங்கியது.

ஆனால் உண்மையில் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிக்கவில்லையாம். மாறாக ஷாருக்கானுக்காக ஒரு புது கதையை அட்லி தயார் செய்து வருகிறாராம்.இதற்கான பேச்சுவார்த்தையில்தான் தற்போது இருவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது மெர்சல் படத்தின் ரீமேக் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் அட்லி – ஷாருக்கான் கூட்டணி இணையும் படம் புகழ்பெற்ற டான் படத்தின் மூன்றாம் பாகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த டான் படம்தான் தமிழில் அஜித் நடிப்பில் பில்லாவாக ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இந்த டான் 3 படம் அஜித்தின் பில்லா 2 பாணியில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
நாளை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - நீங்க தயாரா ரசிகர்களே.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions