தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்

Bookmark and Share

தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்

எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளில் அஜித் இன்னும் கலந்துகொள்ளவில்லை.

இந்தப் படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தன. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்தே படத்தின் 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை வினோத் முடித்துவிட்டார். நாளை முதல் 2-வது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

அஜித்தும் படப்பிடிப்பில் சேர இருக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions