தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?

Bookmark and Share

தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?

கார்த்தியை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் எல்லாம் முன்னணி அந்தஸ்தை அடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.இதேபோல் கார்த்தியை வைத்து சிறுத்தை படம் எடுத்த சிவா பின்னாளில் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் ஆனார். மெட்ராஸ் எடுத்த ரஞ்சித் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் ஆனார்.

தீரன் எடுத்த வினோத் தற்போது அஜித்தின் இரண்டு படங்களை இயக்குகிறார். இந்த லிஸ்டில் தற்போது லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளார். இப்படி கார்த்தியை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் எல்லாம் முன்னணி அந்தஸ்தை அடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions