தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்

Bookmark and Share

தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்

விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் `தலைவி' என்ற பெயரில் உருவாகுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கைப் படத்தின் தலைப்பு `தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

படம் பற்றி இயக்குநர் விஜய் பேசும்போது,

"தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர்.

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர்.

இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என்றார்.

விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார். பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. 


Post your comment





Related News
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை!
தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!
கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்!
மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா?
அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions