தாரை தப்பட்டையில் சசிகுமாருக்கு 7 கெட்டப்புகளாம்

Bookmark and Share

தாரை தப்பட்டையில் சசிகுமாருக்கு 7 கெட்டப்புகளாம்

பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படம் பற்றி பிரஸ் மீட் வைக்காமலே ஏகப்பட்ட செய்திகள் கொட்டுகின்றன. காரணம், இந்தப் படம் பாலாவின் ஸ்பெஷல் உருவாக்கம் மற்றும் இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற பெருமை.படத்துக்கான இசையை இளையராஜா பல மாதங்களுக்கு முன்பே போட்டுக் கொடுத்துவிட்டார்.

ஆனால் திரைக்கதையை மீண்டும் மீண்டும் சரிபண்ணிக் கொண்டிருந்த பாலா, இரு மாதங்களுக்கு முன்புதான் கும்பகோணத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார். அதே வேகத்தில் பெருமளவு காட்சிகளை படமாக்கியும் விட்டார். படத்தின் நாயகன் சசிகுமாருக்கு இதில் ஏழு விதமான தோற்றங்களாம்.

எந்தத் தோற்றமும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் சமீப காலமாக சசியை எங்குமே பார்க்க முடிவதில்லை. சசிகுமார் ஜோடியாக இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். விரைவில் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தவிருக்கிறார்கள்.


Post your comment





Related News
100 ஆண்கள் இருப்பார்கள் ரெண்டே ரெண்டு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க- வசுந்தரா ஓபன்டாக்
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions