சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்

Bookmark and Share

சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தெறி.

இப்படத்திற்கான  படப்பிடிப்பு கோவாவில் நடந்துவருகிறது. இப்படத்தின் நாயகியான எமிஜாக்ஸன் தெறி படம் பற்றியும், சென்னை மக்களுக்கு தெறி குழுவினரின் அடுத்தகட்ட உதவி பற்றியும் சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “ தெறி படத்திற்காக  ஒட்டுமொத்தக் குழுவும் கோவாவில் இருக்கிறோம். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியவிருக்கிறது. விரைவில் சென்னை திரும்புவோம்.
எங்களால் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவமுடியவில்லை, எனவே அடுத்தகட்டமாக சென்னையை மறுகட்டமைக்கவேண்டும். அதற்கான நிதியை நாங்கள் தருவோம். மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சென்னையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவோம்” என்று கூறியுள்ளார். 

இதற்கு நடுவே வெள்ள நிவாரண நிதிக்காக  விஜய் ஐந்து கோடி தந்திருப்பதாக செய்திகள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் கோவா படப்பிடிப்பிலிருந்து விரைவில் திரும்பயிருக்கும் தெறி படக்குழுவினர் சென்னை மக்களுக்காக உதவிசெய்யத் தயாராக வருகிறார்கள் என்று தெரிகிறது.


Post your comment





Related News
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions