தெறி படத்தின் இசையை வெறித்தனமாக உருவாக்கும் ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

தெறி  படத்தின் இசையை வெறித்தனமாக உருவாக்கும் ஜி.வி.பிரகாஷ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘தெறி’ படத்தை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

"தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டன. படத்தின் தீம் மியூசிக்கை தற்போது தீவிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியாகும்" என்று கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இதில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழ்ப்புத்தாண்டில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions