திருடன் போலீஸை வெளியிடும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

Bookmark and Share

திருடன் போலீஸை வெளியிடும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

எஸ்.பி.பி.சரண் தயாரித்திருக்கும் திருடன் போலீஸ் படத்தை ராம.நாராயணனின் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது எஸ்.பி.பி.சரண் தயாரித்த படங்களில் பெரும்பாலானவை தமிழ் சினிமாவின் முகத்தை புதுப்பித்தவை. முக்கியமாக சென்னை 28 மற்றும் ஆரண்யகாண்டம். இரண்டுமே தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவை.

ஆரண்யகாண்டம் கடந்த பத்து வருடங்களில் வந்த சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் வைத்து பேசக்கூடிய தகுதியுள்ள படம். ஆனால் அப்படம் வசூல்ரீதியாக சரியாகப் போகவில்லை. தற்போது திருடன் போலீஸ் படத்தை சரண் தயாரித்துள்ளார். அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இப்படமும் விநியோகஸ்தர்களை பெரிதாக கவரவில்லை.

மீனைவிட கருவாட்டு மணத்தை விரும்புகிறவர்கள் அவர்கள். கடைசியில் ராம.நாராயணனின் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் படத்தை தமிழகம் எங்கும் வெளியிட முன்வந்துள்ளது. ராம.நாராயணனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் படத்தயாரிப்பிலும், விநியோகத்திலும் முழுவீச்சில் இறங்கியுள்ளார். அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி படத்தின் இணைதயாரிப்பும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு 'எனக்கு பெருமைக்குறிய படம் - நடிகர் தினேஷ்.
மாமியாராக மாறிய தேவயானி
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ!
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions