நண்பர்களுக்கு நன்றி சொல்லும் திருடன் போலீஸ் இயக்குனர்!

Bookmark and Share

நண்பர்களுக்கு நன்றி சொல்லும் திருடன் போலீஸ் இயக்குனர்!

கடந்த வாரம் வெளிவந்த படங்களில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படமாக திருடன் போலீஸ் படம் அமைந்துள்ளது. இப்படத்தை யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத கார்த்திக் ராஜு என்பவர் இயக்கியிருக்கிறார்.

ஒரு கான்ஸ்டபிளின் யதார்த்த வாழ்க்கையை சித்தரித்த இந்தப் படம் நகைச்சுவையுடனும், சுவாரசியமான சம்பவங்களுடனும் அமைந்துள்ளதால் அனைத்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்கு தனது நண்பர்களுக்குப் பாராட்டைச் சொல்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு...“நான் இதற்கு முன் எந்த இயக்குனருடனும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை.

சில முக்கிய படங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளேன். இந்தப் படத்தின் கதையை என் நண்பன் செல்வகுமாரிடம் சொன்னதும் அவனே தயாரிக்க முன் வந்தான். இந்தப் படத்தின் கதை உருவாவதற்கும் வேறொரு நண்பன்தான் காரணமாக இருந்தான். 

என்னுடைய நண்பன் ஒருவன் காவல் துறையில் இருக்கிறான். அவன்தான் அடிக்கடி அவன் அனுபவத்தில் நடந்த சில விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பான். அவை என்னை பாதித்ததால்தான்  திருடன் போலீஸ் கதையை அமைத்தேன்.

இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு அவர்களிருவரும்தான் காரணம். அடுத்து மீண்டும் நண்பனின் தயாரிப்பில் உள் குத்து என்ற படத்தை இயக்க உள்ளேன். இந்தப் படத்திலும் தினேஷ்தான் நாயகன், ” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் கார்த்திக் ராஜு.


Post your comment





Related News
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு 'எனக்கு பெருமைக்குறிய படம் - நடிகர் தினேஷ்.
மாமியாராக மாறிய தேவயானி
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ!
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions