திருக்குறளை இசை வடிவில் கேட்டு மகிழழாம்: பரத்வாஜ் புதிய முயற்சி

Bookmark and Share

திருக்குறளை இசை வடிவில் கேட்டு மகிழழாம்: பரத்வாஜ் புதிய முயற்சி

'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். ‘அமர்க்களம்‘, ‘ரோஜா வனம்‘, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘பாண்டவர் பூமி’, ‘ரோஜா கூட்டம்’, ‘ஜெமினி’, ‘அன்பே சிவம்’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக, ‘அசல்’ படத்திற்கு இசையமைத்தார். இதன்பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.


இந்நிலையில், இளையராஜா திருவாசகத்திற்கு இசையமைத்ததுபோல் பரத்வாஜ் திருக்குறளுக்கு இசையமைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதன்காரணமாக உலக முழுவதும் உள்ள தமிழறிஞர்களை சந்தித்துள்ளார்.


1330 குரளுக்கும் தனித்தனி ட்யூன்களை போட்டிருப்பது இந்த ஆல்பத்தின் சிறப்பு. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு குறளுக்கும் பிரபலமானவர்களை கொண்டு பொழிப்புரையும் சொல்ல வைத்திருக்கிறாராம். விரைவில் இந்த இசை ஆல்பம் மிகப்பெரிய வி.ஐ.பி. ஒருவரால் வெளியாவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல இயக்குனர் தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்
தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions