தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி

Bookmark and Share

தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். 

ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை!
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions