ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!

நடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் அண்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலிப்பதாகவும் இதற்காகதான் இவர் மதம் மாறுவதாகவும் அந்நேரத்தில் சொல்லப்பட்டது.

இந்த செய்தி அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.  இசையமைப்பாளர் குறளரசன், நபீலா அகமது என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுடைய திருமணம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. 

இதற்காக நடிகர் டி.ராஜேந்தர் திரையுலகம் சேர்ந்த பிரபலங்கள் பலரை நேரில் சந்தித்து பத்திரிகை வைத்து வருகிறார். முதலாவதாக ரஜினியை சந்தித்து பத்திரிகை வைத்த டி.ஆர், அதன்பின் விஜயகாந்தையும் சந்தித்தார். இந்நிலையில் தற்போது அவர் நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார் குடும்பத்தினரை அவர்களது வீட்டிலேயே சந்தித்து பத்திரிகை வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்சமயம் லண்டனில் இருக்கும் சிம்பு, கூடிய விரைவில் சென்னை திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions