த்ரிஷா நடிக்கும் இரண்டு மொழிப்படம்!

Bookmark and Share

த்ரிஷா நடிக்கும் இரண்டு மொழிப்படம்!

தொழில் அதிபர் வருண் மணியன் உடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. த்ரிஷாவை விட பல மடங்கு பணக்காரர் வருண் மணியன். எனவே திருமணத்துக்குப் பிறகு த்ரிஷா நடிக்க மாட்டார் என்று திரையுலகில் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் த்ரிஷாவோ... அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்து முடித்த கையோடு த்ரிஷா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் போகி என்ற படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.

நெருங்கிய மூன்று தோழிகளின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் த்ரில்லர் படம் இது. இப்படத்தில் த்ரிஷாவின் தோழிகளாக ஓவியாவும், பூனம் பஜ்வாவும் நடிக்கின்றனர். இப்படத்தை பாண்டியன் என்பவர் இயக்குகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன் அருண் விஜய் மந்த்ரா நடித்த ப்ரியம் படத்தை இயக்கியவர். அப்படத்துக்குப் பிறகு பட வாய்ப்பில்லாமல் இருந்தவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து போகி படத்திலும் நடிக்க இருக்கும் த்ரிஷா ஏற்கனவே ஜெயம் ரவி உடன் பூலோகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பூலோகம் படமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. 


Post your comment





Related News
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions