த்ரிஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்! -ஜெயம்ரவி ஓப்பன் டாக்

Bookmark and Share

த்ரிஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்! -ஜெயம்ரவி ஓப்பன் டாக்

லட்சுமி மூவி மேக்கர் தயாரித்துள்ள படம் சகலகலா வல்லவன். ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, பிரபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுராஜ் இயக்கியிருக்கிறார். இப்படம் ஜூலை 31-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.அப்போது பட நாயகன் ஜெயம்ரவி பேசும்போது... சகலகலா வல்லவன் அப்படின்னு சொல்லும்போதே இந்த டைட்டிலுக்கு நான் தகுதியானவனா என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் கமல் சார் நடித்த அந்த படம் வேறு.

இந்த படம் வேறு. அப்பாடக்கர் என்றால் எல்லாம் தெரிந்தவன் என்பதுதான் பொருள். அதோடு அப்பாடக்கர் என்பது சமஸ்கிருத வார்த்தையாம். அதனால்தான் அந்த டைட்டிலை மாற்ற வேண்டியதாகி விட்டது.

ஆனால் அனைத்தும் தெரிந்தவன் என்று வைத்தால் சரியாக இருக்காது என்பதால் சகலகலா வல்லவன் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.இந்த டைட்டிலை என் படத்துக்காக ஏவிஎம் சரவணன் சார் கொடுத்ததற்காக அவரை நான் வணங்குகிறேன்.

மேலும் இதற்கு முன்பு நான் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தாஸ் படத்தில் நடித்தேன். அதன்பிறகு இந்த படத்தில் இப்போது நடித்திருக்கிறேன். சுராஜ் சாரின் காமெடிக்கு நான் பெரிய ரசிகன்.

நான் எப்பவுமே சீரியசா கதை கேட்பதாக எல்லோரும் சொல்றாங்க. அது ஏன்னு எனக்கு தெரியல. ஆனா இந்த படத்துக்காக சுராஜ் சார் கதை சொன்னப்ப நான் சிரிச்சிக்கிட்டேதான் கேட்டேன். ஆனாலும் உடனே ஓகே சொல்லல. ஒரு ரெண்டு நாள் கழிச்சித்தான் நடிக்கிறதா சொன்னேன். அந்த கதைக்குள் நான் உட்காருகிறேனா என்று இரண்டு நாட்களாக யோசித்த பிறகே முடிவெடுத்தேன்.

மேலும், த்ரிஷாவோட மூனாவது படம் என்பதால், த்ரிஷாவ உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமான்னு எல்லோரும் கேட்கவே ஆரம்பிச்சிட்டாங்க. உண்மையாவே எனக்கு த்ரிஷாவ ரொம்ப பிடிக்கும்.

அதுல என்ன தப்பு இருக்கு. நாங்க நல்ல ப்ரண்ட்ஸ. சில சிட்சுவேசன்களை அவ்ளோ ஈசியா உள்வாங்கி நடிப்பாங்க. அவரைப்பார்த்து நான் நிறைய வியந்திருக்கிறேன். இந்த படத்துல த்ரிஷாவோட கேரக்டர் பயங்கரமா பேசப்படும்.இந்த படத்தோட கதை கேட்டதுமே, இன்னொரு ஹீரோயினி கேரக்டருக்கு அஞ்சலி நடிச்சா நல்லாருக்குமுன்னு நான்தான் சொன்னேன்.

அந்த வில்லேஜ் கேரக்டர்ல அவங்க பண்ணினா கேரக்டர் பிரமாதமாக இருக்கும்னு எனக்கு தோணிச்சு. இந்த படத்துல ரொம்ப க்யூட்டா, காமெடி கலந்து அருமையாக நடிச்சிருக்காங்க அஞ்சலி.

மேலும், இந்த படத்துல இருந்து சூரி காமெடி சூப்பர் ஸ்டாராவே ஆகிடுவாரு. நாங்களெல்லாம் 50 சதவிகிதம்னா, அவர் மட்டும் 50 சதவிகிதம். அந்த அளவுக்கு கதையில் அவருக்கு முக்கியத்துவம் உள்ளது.

அதோட படத்துல சூரி கலக்கியிருக்காரு. நிச்சயமா அவருக்கு இது ஒரு மிகப்பெரிய படமா இருக்கும்.பிரபு சார் எனக்கு அப்பாவா நடிச்சிருக்காரு. இந்த படம் என்னதான் காமெடி பேக்கேஜா இருந்தாலும், இந்த ஜெனரேசனுக்கு தேவையான ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறோம்.

அது தேவையான விசயமும் கூட. திருமணம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அப்படியே திருமணமானாலும் விவாகரத்தாகி விடுகிறது.

இன்னும் பத்து வருசம் கழிச்சு கணவன்-மனைவி ஒன்னா இருந்தாலே அது ஜாயிண்ட் பேமிலின்னு சொல்லும் நிலை ஏற்படும் என்று காமெடியாகவும் சொல்லியிருக்கிறோம்.

இந்த நிலை ஏற்படக்கூடாது. கணவன் மனைவி உறவுமுறை என்பது தொடர வேண்டும் என்பதை மையமாக வைத்துதான் இந்த சகலகலா வல்லவன் படத்தின் கதை அமைந்துள்ளது என்கிறார் ஜெயம்ரவி.


Post your comment

Related News
மேக்கப் இல்லாத த்ரிஷாவின் முகம் எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions