பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா

Bookmark and Share

பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா

அமிதாப்பச்சன் - டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித்குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். இந்த நிலையில் இந்தியில் வெற்றி பெற்ற இன்னொரு படமான ‘பட்லா’வும் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்திலும் அமிதாப்பச்சன், டாப்சி இணைந்து நடித்துள்ளனர். ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இந்த படத்தின் தமிழ் பதிப்பில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் டாப்சி வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த 96 படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.

மேலும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். இப்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு ஆகிய 4 படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. 


Post your comment





Related News
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions