ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் ஒரு நடிகை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே லைம் லைட்டில் நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த அசாத்தியத்தை தனது விடாமுயற்சியால் சாத்தியமாக்கி 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் ஆச்சரிய நாயகியாக உருமாறியிருக்கிறார் த்ரிஷா.

 அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு அண்மையில் வெளியான 96 மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்தார்.

இனி த்ரிஷாவின் வாழ்நாள் கதாபாத்திரம் ஜெஸ்ஸியா ஜானுவா என விவாதிக்கும் அளவு ஜானுவின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் த்ரிஷா. தற்போது அதே உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் இப்படத்தை எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு ராங்கி என தலைப்பு வைத்துள்ளனர். நேற்று இப்படத்தின் டைட்டிலை த்ரிஷா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions