த்ரிஷா இல்லனா நயன்தாராவில் ஆர்யா...!

Bookmark and Share

த்ரிஷா இல்லனா நயன்தாராவில் ஆர்யா...!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார், 'கயல்' ஆனந்தி மற்றும் பலர் நடிக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' வில் ஆர்யா ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். தான் நடிக்க அழைத்ததால்தான் ஆர்யா நடித்துக் கொடுத்தார் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

அவர் அழைக்கவில்லை என்றாலும் படத்தின் பெயருக்காகவாவது ஆர்யா கண்டிப்பாக நடித்திருப்பார் என ஜி.வி.க்கு தெரியாதா என்ன ?. அந்த இரண்டு ஹீரோயின்களுமே ஆர்யாவுக்கு நெருக்கமான தோழிகள்தானே. ஏற்கெனவே இந்தப் படத்தில் சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

அவர்களோடு கடந்த வாரம் பிரியா ஆனந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்தார். தற்போது ஆர்யாவும் நடித்திருக்கிறார். அப்படியே படத்தின் தலைப்புக்குக் காரணமான த்ரிஷாவையும், நயன்தாராவையும் நடிக்க வைத்து விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் ஜி.வி. பிரகாஷ்.

எப்படியாவது இயக்குனரிடம் சொல்லி அதையும் செய்து விடுங்கள். ஆர்யா நடித்திருக்கிறார் என்று சொல்லிப் பாருங்கள், அவர்களும் நடித்துக் கொடுக்க வாய்ப்புண்டு.

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions