வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் உதயநிதி

Bookmark and Share

வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ முதல் கடைசியாக அவர் நடித்த ‘கெத்து’ படம் வரை அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனமே தயாரித்திருந்தது. 

அதுமட்டுமில்லாமல், தற்போது இவர் நடித்து வரும் ‘மனிதன்’, இனிமேல் நடிக்கவிருக்கும் சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ஆகிய படங்களையும் உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்கிறார். 

ஆனால், தற்போது முதன்முறையாக வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்கவிருக்கிறார். அதாவது, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இப்படத்தின் இயக்குனர் யார்? என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

 


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions