உதயநிதி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!

Bookmark and Share

உதயநிதி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!

திமுக., தலைவர் கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலின், ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகாகி, ஹீரோவாக உயர்ந்துள்ளார். இப்போது இவரது குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

அவரது பெயர் ரக்ஷ்ன். உதயநிதியின் அம்மா துர்காவின் தம்பி மகன் தான் இவர். ரக்ஷ்னின் அப்பா திருவெங்காடில் டாக்டராக இருக்கிறார். இவரது அம்மா ஹேமலதா மூன்று பள்ளிகளை நிர்வகித்து வருகிறார். ரக்ஷ்ன், இன்ஜினியரிங் படித்துள்ளார்.

சினிமா மீதுள்ள ஆசையில், ஜெயராவ் என்பவரது கூத்து பட்டறையில் சேர்ந்து இரண்டு வருடம் நடிப்பு பயிற்சி பெற்றார். கூடவே ஒரு ஹீரோவுக்கு தேவையான நடனம், சண்டை பயிற்சி போன்ற கலைகளையும் கற்றுகொண்டு, திருட்டு ரயில் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.

திருட்டு ரயில் படத்தில் பிரிட்ஜ், ஏசி, வாசிங் மிஷின் விற்கும் ஏஜென்சி ஆளாக நடித்துள்ளார்.திருட்டு ரயில் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரக்ஷ்ன் நம்மிடம் கூறியதாவது, எனது தாத்தா மற்றும் அப்பா-அம்மா மூலமாகத்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மேரா முன் முதன்முதலாக நின்று நடித்தபோது முதல் இரண்டு நாட்கள் சற்று தடுமாற்றம் இருந்தது. அதன் பின்னர் அது சரியாகிவிட்டது.

இந்தப்படத்தில் புதுமுகம் கேத்தி என்பவர் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஐதராபாத்தில் படமாக்கப்பட்ட ரயில் காட்சிகள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது.  

திருட்டு ரயில் படத்தின் டிரைலரை பார்த்து உதயநிதி பாராட்டினர். எனக்கு சினிமாவில் ஆர்யா, சிவாவை போல வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. நல்ல நல்ல படங்களில் நடித்து நானும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்கிறார் ரக்ஷ்ன்.


Post your comment





Related News
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions