ஆண்டிப்பட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பு தடுத்து நிறுத்தம்

Bookmark and Share

ஆண்டிப்பட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பு தடுத்து நிறுத்தம்

தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற படப்பிடிப்பு நடந்து வருகிறது.நேற்று ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வேலப்பர்கோவில் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

தகவல் அறிந்ததும் இந்து சமய அறநிலையத்துறையினர் படப்பிடிப்பு குழுவினரிடம் சென்று இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான அரசு வழங்கிய அனுமதியை கேட்டனர்.ஆனால் படப்பிடிப்பு குழுவினர் அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து அனுமதி பெற்று படப்பிடிப்பினை நடத்துமாறு அறநிலையத்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த குழுவினர் ஆயத்தமாகி இருந்தனர்.

வனத்துறையினரும் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என கூறினர்.இதனால் படப்பிடிப்புக்கு தயாராகி வந்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி நிவேதா மற்றும் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 


Post your comment

Related News
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
அந்தர் பல்டி அடித்த ராகவா லாரன்ஸ்; அப்போ மானம் தன்மானம் எல்லாம் பொய்யா?
மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்!
வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!
டைட்டானிக்கின் 22 ஆண்டுகால வசூல் சாதனையை இரண்டே வாரத்தில் முறியடித்த அவெஞ்சர்ஸ்!
ஒரே வாரம்தான்; அதற்குள் உலகளவில் அவெஞ்சர்ஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை!
வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல!
பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions