மீண்டும் ‘உன் சமையல் அறையில்’ இசைஞானியுடன் கை கோர்க்கும் பிரகாஷ்ராஜ் !

Bookmark and Share

மீண்டும் ‘உன் சமையல் அறையில்’ இசைஞானியுடன்  கை கோர்க்கும் பிரகாஷ்ராஜ் !

சமீபத்தில் ‘தோனி’ படத்தினை இயக்கி  விமர்சகர்களின் பலத்த பாராட்டுகளை பெற்ற பிரகாஷ்ராஜ் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘உன் சமையல் அறையில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் ‘சால்ட் அண்டு பெப்பர்’ என்ற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இதன் ரீ மேக்கே ‘உன் சமையல் அறையில்’,இதில் மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு தபு தமிழில் நடிக்கிறார்.

மலையாளத்தில் ஆஷிக் அபு இயக்கியிருந்த இந்த படத்தில் லால், சுவேதா மேனன் நடித்திருந்தார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரகாஷ்ராஜ் இயக்கி வரும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

‘சமீபத்தில் நான் பார்த்த படங்களில் ‘சால்ட் அண்டு பெப்பர்’ போல் என் சினிமா பசியைத் தூண்டிய படம் வேறு எதுவும் இல்லை. சின்னச்சின்ன மாற்றங்களுடன், இசைஞானியின் ஐந்து புதிய பாடல்களுடன், ‘என் சமையல் அறையில்’ மூன்றே மாதங்களில் முடிந்து திரைக்கு வரும்’ என்கிறார் பிரகாஷ ராஜ்.


Post your comment





Related News
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
பிக் பாஸில் பங்கேற்கவில்லை - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை!
கார்பரேட் மாடலிங்குடன் மோதும் தமிழச்சி மீரா மிதுன்
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions