உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி

Bookmark and Share

உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி

கோவையில் உறுமீன் படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு தயாரிப்பாளர் டெல்லி பாபு, இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி, கதாநாயகன் பாபி சிம்ஹா ஆகியோர் வந்தனர். அவர்கள் தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். 

அப்போது படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:– எனது சொந்த ஊர் திருப்பூர். நான் பல ஆண்டுகளாக எடிட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். அதன் பிறகு புகைப்படம், மாலை பொழுதின் மயக்கத்திலே ஆகிய படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினேன். 

உறுமீன் படம் நான் இயக்கும் முதல் படம். நகரை மையமாக கொண்டு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியா முழுவதும் 320 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சென்னையில் மழை வெள்ளம் காரணமாக ரிலீசாகவில்லை. 
இவ்வாறு அவர் கூறினார். 

கே.ஜி தியேட்டருக்கு வந்த உறுமீன் படக்குழுவினரை வினியோகஸ்தர் காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார். தங்கம் ஆர்ட்ஸ் சுப்பிரமணியம் மற்றும் தியேட்டர் நிர்வாகிகள் வரவேற்றனர்.


Post your comment





Related News
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions