ரசிகர்களின் பாராட்டை வாரிகுவிக்கும் ’உத்தமவில்லன்’

Bookmark and Share

ரசிகர்களின் பாராட்டை வாரிகுவிக்கும் ’உத்தமவில்லன்’

கமலின் உத்தமவில்லன் படத்தை வெளிநாடுகளில் பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இப்படம் நேற்று ரிலீசானது.

அங்கு உத்தமவில்லனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.அவுட்ஸ்டேண்டிங் மற்றும் எமோசனல் படம். படத்தின் கிளைமாக்ஸ் பிரமாதம் என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

படத்தில் சிலப்பல குறைகள் இருந்தாலும் விதைகளைத் தூக்கிப் போட்டு விட்டு பழத்தை மட்டும் சாப்பிடலாம் என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தைப் பார்த்தால் நிச்சயம் உங்கள் கண்கள் குளமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.உலகநாயகன் அவருடைய ஸ்டைலைப் படத்தில் காட்டியுள்ளார்.

டீசண்டான முதல்பாதி, இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்தாலும், கிளைமாக்சில் எழுந்து நின்று கை தட்டாமல் இருக்கவில்லை என சபாஷ் கூறியுள்ளனர் ரசிகர்கள்.இயக்குநர் கே.பாலசந்தர் நடித்த கடைசிப் படம் இது என்பதால் அவரையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

அதேபோல் ஊர்வசி, நாசர், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும் பிரமாதம் என பாராட்டியுள்ளனர்.செஞ்சுரிகளைக் கடந்து நடக்கும் கதையில் கமலின் இரட்டை வேடம் ரசிக்க வைக்கிறது.

பின்னணி இசை அபாரம் எனப் பாராட்டியுள்ளனர்.படத்தின் முதல் பாதி பிரமாதமாக இருப்பதாகவும், 2ம் பாதியில் விறுவிறுப்பு குறைவாக இருப்பதாகவும், அதேசமயம், கிளைமேக்ஸ் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதாகவும் கஷாயம் வித் பாஸ்கி என்பவர் கூறியுள்ளார்.

உத்தமன் என்பவர் கூறுகையில், நாசர் அட்டகாசமாக நடித்துள்ளார். கமல்ஹாசன் வழக்கம் போல நடிப்பில் பிரமாதப்படுத்தியுள்ளார். இருவருக்கும் மிகப் பிரமாதமான பாத்திரங்கள் என்று பாராட்டியுள்ளார்.

சாதிக் பாட்ஷா என்பவர் கூறுகையில், உத்தமவில்லன் கிளாஸ் படம்.  பிரில்லியன்ட் நடிப்பு அமேசிங் பின்னணி இசை. எந்தத் தவறும் கண்டுபிடிக்க முடியாது. இன்னொரு முறை பார்க்க வேண்டும் போல் உள்ளது என்று கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions