இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 60 வருடங்களாக திரைத்துறையில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை தமிழ் படத்தில் நடித்ததில்லை. தற்போது முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் எஸ்.சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், எனது வாழ்க்கையின் மகிழ்வான தருணம் இது.

நான் காணாத கனவை நிறைவேற்றிய கடவுளுக்கும், எனது பெற்றோருக்கும் நன்றி. அமிதாப் பச்சன் அவர்களுக்கும் நன்றி. எனது இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த் மற்றும்இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த இயக்குகிறார். 

உயர்ந்த மனிதன் படம் குறித்து தமிழ்வாணன் கூறும்போது, ‘எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை’ என்றார். 


Post your comment





Related News
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல்!
காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!
தண்டல்காரன் பாட்டுக்கு பின்னாடி இப்படியொரு கதையா? என்னன்னு நீங்களே பாருங்க!
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions