ஹீரோக்களான காமெடியன்கள் !

Bookmark and Share

ஹீரோக்களான காமெடியன்கள் !

காமெடியன்களின் நடிப்பு படங்களில் பேசப்படும்போது அவர்களுக்கு ஓர் ஆசை வரும். நாமே ஏன் கதாநாயகனாக நடிக்கக் கூடாது என்று தோன்றும். இது சிலருக்கு விபரீதமான ஆசையாகக் கூட முடிந்ததுண்டு. ஒருகாலத்தில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கூட நல்லதம்பி தயாரித்து நடித்தார். பெயர் வந்தது. ஆனால் படம் ஓடவில்லை.

பிற்காலத்தில் கவுண்டமணி கூட பணம் பத்தும் செய்யும் நடித்தார். ஓடவில்லை. வடிவேலு முதலில் நாயகனாக நடித்த இம்சை அரசன் 23 ஆம்புலிகேசி வெற்றி பெற்றது.

அடுத்ததாக நடித்த இந்திர லோகத்தில் நா அழகப்பன் தோல்விப்படமானது. பின்னர் வந்த தெனாலி ராமனும் படுதோல்வி அடைந்தது. இந் நிலையில் இப்போது எலி படத்தில் நடித்துவருகிறார். வடிவேலு புலியைப் போல எலி- யைப் பலமுள்ளதாக நம்பிக் கொண்டிருக்கிறார்.

கருணாஸ் அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளபுரம் படங்களில் நடித்தார். பெரிதாக ஜெயிக்க வில்லை. சந்தானம் முதலில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நாயகனாக நடித்தார். படம் வெற்றி.

அடுத்து தானே முழு முதலீடு செய்து வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தை தயாரித்து நடித்தார். இப்படமும் சோடை போகவில்லை. மூன்றாவது படமாக நடித்து இனிமே இப்படித்தான் வெளியாகியுள்ளது. படம் பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

காமெடியன்கள் கதாநாயகன்களாக நடிக்கும் போது தாங்கள் ஒரு காமெடியன் என்பதை மறந்து விடுகிறார்கள் தாங்களும் ஒரு ஆக்ஷன் ஹீரோ ஆக நினைப்பது விபரீதம். முதல் படத்தை விட இரண்டாவது படம் முக்கியம்.

தங்களுக்கு என்ன வரும் எதை ரசிப்பார்கள் என்பதைப் புரிந்து நடித்தால் வெற்றி பெறலாம். இதற்கு ஒரே உதாரணம் சந்தானம். இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு காட்சியில் காதலியுடன் போகும் போது முரடர்கள் வழிமறிப்பார்கள்.

அப்போது சண்டை போடவேண்டும். ஹீரோ மாதிரியும் தெரியக் கூடாது. காதலியின் ஹை ஹீல்ஸ் ஷூவை வாங்கி மாட்டிக் கொண்டு சண்டை போடுவார். சிரிப்பு வரும் காட்சியாக மாறிவிடும். இதுமாதிரி சிறு சிறுநகாசு வேலைகள் படத்தில் நிறைய இடங்களில் செய்து இருக்கிறார்கள். எனவே படம் முழுக்க சிரிப்பலைகள் பரவுகின்றன.

கதாநாயகர்களுடன் சேர்ந்து வடிவேலு வின்னர், ரெண்டு, காவலன் போன்ற படங்களிலும், சந்தானம் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒருகல் ஒரு கண்ணாடி, ராஜாராணி, நண்பேன்டா படங்களிலும் கருணாஸ் வில்லன் போன்ற படங்களிலும் கலகலப்பாக நடித்தனர், வரவேற்கப்பட்டனர்.

படம் முழுக்க கதாநாயகனுடன் பக்க வாத்தியம் வாசிக்கும் போது ரசிக்கும் போது காமெடியன்களை ரசிக்கும் ரசிகர்கள் தனியாவர்த்தனம் செய்யும் போது ரசிக்காத காரணம் என்ன? தனக்கு என்ன வரும் எனத்தெரிந்து தனக்கான சட்டை எதுவென புரிந்து கொண்டு அதை அணிய வேண்டும்.அப்படி நடித்தால் மட்டுமே காமெடியன்கள் வெற்றி பெற முடியும் என்று இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.


Post your comment

Related News
வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை?
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions