புயல் நடிகர் தலைமறைவால் சல்லடை போட்டுத்தேடும் ரசிகர்கள்

Bookmark and Share

புயல் நடிகர் தலைமறைவால் சல்லடை போட்டுத்தேடும் ரசிகர்கள்

புயல் காமெடியன் தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார். பிறகு இவரின் அரசியல் ஈடுபாட்டால் கேப்டன் நடிகருடன் மோதி இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

அதன்பிறகு இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தவர், அடுத்தபடியாக காமெடியனாக நடிக்கவே, ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பெரிய சம்பளம் கேட்டு மிரட்டியதால் தயாரிப்பாளர்கள் அவரை கைக்கழுவி விட்டனர்.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் திமிரு நடிகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் அவர், எதிர்பார்ட்டியை ஏகவசனத்தில எக்குத்தப்பாக விமர்சனம் செய்தார். இதனால் எதிர்பார்ட்டி தலைவரின் ரசிகர்கள் இவர் மீது கொலைவெறியில் உள்ளனர். அதன் காரணமாக, புயல் காமெடியனை நான்கரை ஆண்டுகளாக காணவில்லை என்று சென்னையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதோடு நடிகருக்கும் போன் போட்டு ஏகவசனத்தில் திட்டித்தீர்த்து வருகிறார்களாம். ஒரு கட்டத்தில் நடிகரும் பதிலுக்கு பதில் பேச, லிமிட் தாண்டி விட்டார்களாம், ரசிகர்கள். அதனால், தனது தொலை தொடர்புகளை துண்டித்து விட்டு தலைமறைவாக இருந்து கொண்டிருக்கிறார் புயல் காமெடியன்.


Post your comment





Related News
வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை?
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions