சினிமா வாய்ப்புகளை மறுக்கும் வந்திதா மோகன்

Bookmark and Share

சினிமா வாய்ப்புகளை மறுக்கும் வந்திதா மோகன்

புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை அபிராமி தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை இப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் வந்திதா மோகன். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ள வந்திதா, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அடிப்படையில் ஒரு பல் மருத்துவர்  என்பதால் அந்த பணியையும் தனியாக செய்து வருகிறார். ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது அனைவருமே "நீங்க அழகா இருக்கீங்க நடிக்கலாமே" என்று சொல்ல ஆரம்பித்தனர்.

கவுதமி இவரது நிகழ்ச்சியை பார்த்து விட்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடிக்க அழைத்தபோது அன்பாக மறுத்துவிட்டார்.  ஈராஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் நாடகத்தை தயாரித்து அதனை யூ டியூப்பில் வெளியிடும் புராஜக்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வந்திதாவுக்கு அழைப்பு விடுத்தது அதையும் தவிர்த்து விட்டார். வந்திதாவின் ஆசையெல்லாம் நடனத்திலும், மருத்துவத்திலும் சாதிக்க வேண்டும் என்பதுதான்.

அடுத்ததாக டூரிஸம் பெஸ்டிவெல் நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுக்க நடைபெற இருக்கும் டான்ஸ் பெஸ்டிவெல் இது. ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை முதலில் நடத்திய அபிராமி சினிமாவில் நடிப்பதற்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வந்திதா சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions