பிடிகொடுக்காத வேதிகா!

Bookmark and Share

பிடிகொடுக்காத வேதிகா!

மதராஸி, முனி, காளை, சக்கரக்கட்டி என பல படங்களில் நடித்தவர் வேதிகா. கன்னட நடிகையான இவரை, பாலா தனது பரதேசி படத்தில் நடிக்க வைத்தபோது அடுத்து தமிழில் குறிப்பிடத்தக்க நடிகையாகி விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, காவியத்தலைவன் படத்திலும் சித்தார்த்துடன் நடித்தார் வேதிகா.

ஆனால், அப்படி இரண்டு மெகா படங்களில் நடித்தபோதும் அடுத்தபடியாக தமிழில் வேதிகாவுக்கு எந்த படமும் புக்காகவில்லை. பரதேசியைப் பார்த்து விட்டு அவருக்கு சான்ஸ் தருவதாக சொன்னவர்கள்கூட பின்னர் ஏறெடுத்தே பார்க்கவில்லை. அதனால் தெலுங்கு, மலையாளம் என்று ரூட்டை மாற்றினார் வேதிகா.

இந்தநிலையில், சமீபத்தில் ஒரு பட நிறுவனத்தினர் தங்கள் படத்தில் நடிக்க வேதிகாவை தொடர்பு கொண்டார்களாம். ஆனால் அந்த படம் பற்றிய முழுவிவரத்தையும் கேட்ட அவர், அவர்களுக்கு பிடிகொடுக்கவே இல்லையாம். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சொன்னவர், பின்னர் இப்போது நான் இந்தியாவில் இல்லை வெளிநாட்டில் இருக்கிறேன் என்று டேக்கா கொடுத்து விட்டாராம்.

இதனால் வேதிகாவுக்காக காத்திருந்த அப்படக்குழுவினர் இப்போது வேறு நடிகையை புக் பண்ணி விட்டனர். அதேசமயம், தமிழில் படமே இல்லாத வேதிகா எதற்காக தேடிச்செல்லும் வாய்ப்பினைகூட இப்படி அலட்சியம் செய்கிறார் என்பது புரியாமல் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

அதேபோல் சில சினிமா மேனேஜர்கள் படவிசயமாக அவரிடம் பேச தொடர்பு கொண்டாலும் பிடிகொடுக்காமலேயே அவர்களை டீலில் விடுகிறாராம் வேதிகா.


Post your comment





Related News
ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா
பாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி
பிரபல நடிகையின் வைரலாகும் சர்ச்சை புகைப்படம் - என்னமா இது?
இந்தியன் சுகன்யாவை போல் வேதிகா !
நடிகை வேதிகாவுக்கு பிடித்த இடம் சென்னையில்..
வேதிகா இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மா
பிருத்விராஜின் சிபாரிசில் வேதிகா
ஷிவலிங்காவை நம்பும் வேதிகா
மோகன்லாலை சந்தித்த வேதிகா
டைவர்ஸ் ஆன ஹீரோவுடன் நடிக்க வேதிகா மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions