வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!

Bookmark and Share

வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!

வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே. நகர் படம் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பாளராக மாறி தயாரித்திருக்கும் படம் ஆர்.கே. நகர். சமகால அரசியலை நையாண்டி செய்து உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டமே ரசிகர்களை கவர்ந்தது.

இதைதொடர்ந்து படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் சீசன் என்பதால் இந்த தேதி பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.ஆனால் இந்த தேதியில் படத்தை வெளியிட சில அமைப்பினர் வெங்கட் பிரபுவுக்கு மறைமுகமாக அழுத்தம் தந்துள்ளனர்.

இதை வீடியோவின் மூலம் தெரிவித்த வெங்கட் பிரபு, தன் வேதனையை ரசிகர்களுக்கு புரிய வைக்க அஜித்தின் ”வாழு.. வாழ விடு” எனும் வாசகத்தையும் மேற்கோள் காட்டினார்.இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படம் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions