நாமதான் எப்பவுமே மாஸ்: தலைப்பு மாற்றம் குறித்து வெங்கட்பிரபு விளக்கம்

Bookmark and Share

நாமதான் எப்பவுமே மாஸ்: தலைப்பு மாற்றம் குறித்து வெங்கட்பிரபு விளக்கம்

சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்’. படத்திற்கு தலைப்பு வைத்த பிறகுதான் இதன் படப்பிடிப்பையே தொடங்கினார் வெங்கட்பிரபு. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது. 

இதையடுத்து, இப்படத்திற்கு வரிவிலக்கு வாங்குவதற்காக ஆங்கிலத்தில் இருக்கும் ‘மாஸ்’ தலைப்பை ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ என்று மாற்றியுள்ளனர். ஆனால், ரசிகர்களுக்கு ‘மாஸ்’ தலைப்புதான் பெரிதும் கவர்ந்துள்ளது. ஆகையால், இந்த புதிய தலைப்பிற்கு ரசிகர்களிடையே ஒரு அதிருப்தி நிலவி வந்தது.

இந்நிலையில், படத்தின் தலைப்பு மாற்றியது குறித்து வெங்கட் பிரபு கூறும்போது, படத்திற்கு என்ன தலைப்பு என்பது இங்கு பிரச்சினையில்லை. எதற்காக தலைப்பு மாற்றியிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். இருந்தாலும் எப்பவுமே நாமதான் மாஸ் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, தலைப்பு போடாமலேயே இந்த படத்துக்கு பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் ரிலீஸ் பண்ணியதை எல்லாம் மறந்துட்டீங்களா? என்றும் கேட்டுள்ளார். 
தலைப்பு மாற்றப்பட்ட நிலையில், கூடிய விரைவில் மாற்றப்பட்ட தலைப்புடன் புதிய போஸ்டர்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions