யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர்! - வெங்கட் பிரபு

Bookmark and Share

யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர்! - வெங்கட் பிரபு

மாஸ் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான். அதில் மாற்றம் இல்லை என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபுவின் தம்பியும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பற்றித்தான் கடந்த இரு தினங்களாக செய்திகள்.

இப்போது அவர் சூர்யா நடிக்கும் மாஸ் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். திடீரென இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அவருக்குப் பதில் தமனை இசையமைக்குமாறு சூர்யா கூறிவிட்டார் என்றும், அவர் இசையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பும் நடக்கிறது என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம், யுவன் சம்மதத்தோடுதான் தமன் இசையில் ஒரு பாடல் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டதாக சிலர் புது விளக்கம் கூறினர்.

இந்த நிலையில் இந்த குழப்பத்துக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வெங்கட் பிரபு ட்விட்டரில் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில் யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர், அதில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளார். எப்படியோ.. குழப்பம் தீர்ந்தால் சரி!


Post your comment





Related News
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions