மார்ச்-18ல் “வெற்றி வேல்” இசை வெளியீடு

Bookmark and Share

மார்ச்-18ல் “வெற்றி வேல்” இசை வெளியீடு

பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் வெற்றிவேல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த M.சசிகுமார் “வெற்றிவேல்” படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

முக்கிய வேடத்தில் பிரபு மற்றும் தம்பி ராமையா இப்படத்தில் நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகளுடன் M.சசிகுமார் நடிக்கின்றார்.

காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து கலவைகளையும் கலந்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கபட்டுள்ளது.

டி இமான் படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தஞ்சாவுர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.

தற்போது இறுதி கட்டப் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள வெற்றிவேல் படக்குழு, இப்படத்தின் இசை வெளியிடு வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என்றும், இப்படம் மிக விரைவில் பட வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

 


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions