சூர்யா படத்தில் நடிக்கும் வித்யா பிரதீப்!

Bookmark and Share

சூர்யா படத்தில் நடிக்கும் வித்யா பிரதீப்!

‘அதிபர்’ படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக நடித்தவர் வித்யா பிரதீப். தற்போது ‘அசுரகுலம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘பசங்க-2’ படத்திலும் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, நான் சூர்யாவை முதன்முதலாக ‘பசங்க-2’ செட்டில் பார்த்ததும் எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருடன் நடிக்கவேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் கனவு இந்த படத்தின் மூலம் நிறைவேறி விட்டது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‘பசங்க-2’ மூன்று குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதை. ஒன்று சூர்யாவின் குடும்பம், இன்னொன்று பிந்துமாதவியின் குடும்பம். மற்றொரு குடும்பம் என்னுடையது. இப்படத்தில் நான் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுடன் அமலாபால், பிந்துமாதவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சூர்யா தனது சொந்த நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஆரோல் கொரெல்லி இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை வருகிற அக்டோபர் 17-ந் தேதி வெளியிடவுள்ளனர். 


Post your comment





Related News
நேர்கொண்ட பார்வை படத்தில் இப்படி ஒரு காட்சியா! ஹிந்தியிலிருந்து செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம்- கசிந்த சூப்பர் தகவல்
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அந்த இயக்குனர் என் மார்பகத்தை பார்த்துட்டார் - பிரபல நடிகை ஒபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions