குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!

Bookmark and Share

குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!

சமீபகாலமாக அஜித்தான் தனது படங்களுக்கான தலைப்பை அறிவிக்காமலேயே படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறார். அதன்காரணமாக அவரது ரசிகர்கள் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள்.

அதையடுத்து அவர்களாகவே ஒரு டிசைன் செய்து தல படத்தின் தலைப்பு இதுதான் என்று இணையதளங்களில் ஆளுக்கொரு தலைப்பாக வைத்து பப்ளிசிட்டியும் செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

அதன்பிறகுதான் இனியும் விட்டால், ரசிகர்கள் ரொம்ப டென்சனாகி விடுவர்கள் என்று கடைசி நேரத்தில் டைட்டீலை அறிவித்து வருகிறார் அஜித். அந்த வகையில், வீரம் படத்தை தவிர, ஆரம்பம், என்னைஅறிந்தால் , வேதாளம் ஆகிய படங்களுக்கு அதிக தாமதமாகவே தலைப்பை வெளியிட்டார் அஜித்.

ஆனால், விஜய் படங்களைப் பொறுத்தவரை ஆரம்பத்திலேயே டைட்டில் வைத்துதான் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். ஆனால், இப்போது விஜய்யும் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் தனது 59வது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்காக இதற்கு முன்பு விஜயகாந்த், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் போலீசாக நடித்த பல படங்களின் டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் இதுதான் படத்தின் டைட்டில் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இதுவரை தீபாவளிக்கு எப்படியும் விஜய் படத்தின் தலைப்பினை அறிவித்து விடுவார்கள் என்று பொறுமை காத்து வந்த விஜய் ரசிகர்கள், இப்போது அதற்கான அறிகுறியே இல்லாததால், இணையதளங்களில் வெற்றி, காக்கி என்று விஜய் படத்திற்கு டைட்டில் வைத்திருப்பதாக அவர்களாகவே முடிவெடுத்து டிசைன் வெளியிட்டு வருகின்றனர். அதோடு, இதற்கு மேலும் எங்களுக்கு பொறுமை இல்லை தளபதியாரே என்றும் கேப்சன் கொடுத்துள்ளனர்.

 


Post your comment





Related News
பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions