நீண்ட யோசனையுடன் வாக்களித்த விஜய்

Bookmark and Share

நீண்ட யோசனையுடன் வாக்களித்த விஜய்

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய நேரம் முதல் பல்வேறு நடிகர், நடிகைகளும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். அஜித், ரஜினி ஆகியோர் காலையிலேயே முதல் ஆளாக வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்ய நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு காலை 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை பார்ப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது.

போலீசார் அவரை பத்திரமாக வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் தனது ஆவணங்களை அலுவலர்களிடம் ஒப்படைத்து, தனது வாக்கை பதிவு செய்ய வாக்கு எந்திரத்திற்கு முன் வந்தார். சில நிமிடம் யோசித்த அவர் பின்னர், தனது வாக்கை பதிவு செய்தார்.

அங்கிருந்து புறப்படும்போதும் ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்துகொண்டனர். பின்னர், அவரை பாதுகாவலர்களும், போலீசாரும் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். 


Post your comment





Related News
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions