விஜய்க்காக அரசர் காலத்து ஆடைகளை வடிவமைத்த சிம்புதேவன்!

Bookmark and Share

விஜய்க்காக அரசர் காலத்து ஆடைகளை வடிவமைத்த சிம்புதேவன்!

வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தைப்போன்று சரித்திர பின்னணி கொண்ட கதையில் விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கியுள்ள படம் புலி. பிரமாண்ட அரண்மனை செட் போட்டு இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ள சிம்புதேவன், பாடல் காட்சிகளுக்கு மட்டும் வெளிநாடு சென்று வந்தார்.

மேலும், ராஜா ராணி காலத்து கதையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஒரு மாகாணத்தின் மகாராணியாக இருக்கும் ஸ்ரீதேவியிடம் தளபதியாக இருக்கும் சுதீப், அந்த மாகாணத்தை தன்வசப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்குவாராம். அதனால் அவரிடமிருந்து தனது மாகாணத்தை காப்பாற்ற ஒரு வீரனை தேடுவாராம் ஸ்ரீதேவி.

அதையடுத்துதான், டைம் மிஷின் மூலம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னோக்கி சென்று சிறந்த வீரனான விஜய்யை அழைத்து சென்று சுதீப்பை முறியடித்து தனது மாகாணத்தை காத்துக்கொள்வாராம் ஸ்ரீதேவி.

ஆக, இந்த படத்துக்காக முதன்முதலாக அரசர் காலத்து உடையணிந்து நடித்துள்ளார் விஜய்.  ஆனால் இந்த காஸ்டியூம்கள் பெரும்பாலும் அரசர் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் அணிந்தது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

அரண்மனைக்குள் இருக்கும்போதும், வேட்டைக்கு செல்லும்போது அவர்கள் எந்தமாதிரியான உடைகளை அணிந்தார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன்படியே விஜய்க்கு பிரத்யேகமாக ஆடைகளை உருவாக்கினாராம் சிம்புதேவன்.


Post your comment





Related News
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions