ஜில்லா - தெலுங்கிலும் ஏரியாக்களைப் பிடித்த விஜய்!

Bookmark and Share

ஜில்லா - தெலுங்கிலும் ஏரியாக்களைப் பிடித்த விஜய்!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை விஜய் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் நடித்து வெளிவரும் படங்களுக்கு மிகப் பெரிய ஓபனிங் இருக்கும். முதல் வாரத்திலேயே மிகப் பெரிய கலெக்ஷனையும் அள்ளிக் கொடுப்பது வழக்கம். சமீப காலமாக தமிழ்நாட்டில் வினியோகஸ்தர்களின் செல்லப் பிள்ளையாக விஜய் இருந்து வருகிறார்.

அவர் நடிக்கும் படங்கள் பூஜை போட்ட நாளன்றே வினியோகஸ்தர்களால் வியாபாரம் பேசப்பட்டு வருகிறது. புலி படத்தின் அனைத்து ஏரியாக்களும் எப்போதோ விற்பனையாகிவிட்டது.

விஜய்க்கு மற்ற எந்த தமிழ் நடிகர்களைக் காட்டிலும் கேரளாவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அவருடைய படங்கள் நேரடி மலையாளப் படம் அளவிற்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும். கர்நாடகாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்.

ஆனால், இதுவரை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமே விஜய் அழுத்தமாகத் தடம் பதிக்காமல் இருந்தார். அந்தக் குறையை ஜில்லா படம் போக்கிவிட்டது. கடந்த வெள்ளியன்று வெளியான ஜில்லா படம் இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியும், படத்தின் இயக்குனர் நேசனும் மீடியாக்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்கள்.

தெலுங்கு நடிகர்கள் தமிழில் நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க முயற்சித்து வரும் நிலையில் தமிழ் நடிகர்கள் டப்பிங் படங்களின் மூலமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜில்லா வெற்றி மூலம் விஜய் தென்னிந்திய அளவில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions