ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய நடிகர் விஜய் உதவி

Bookmark and Share

ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய நடிகர் விஜய் உதவி

நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது அயனாவரம் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜேஷ் அண்ணா நகர் ஆர்ச் அருகில் வாடகை தள்ளுவண்டியில் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு சூப் கடை நடத்தி கொண்டு இருந்தார். அவருக்கு விஜய் தன் சொந்த செலவில் டிபன் கடை வண்டி வழங்கினார்.

கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தில் உள்ள லட்சுமி நகரில் டிபன் கடை, இஸ்திரி கடையை திருமதி.ஞானம் பிரகாசமும் அவருடைய மகன் லூர்துசாமியும் வாடகை வண்டியில் நடத்திக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு விஜய் தன் சொந்த செலவில் டிபன் கடை வண்டி வாங்கிக் கொடுத்தார்.

திருமதி.ஞானம்பிரகாசம் மகனுடன் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து வண்டியை பெற்றுக் கொண்டு சென்றார். நீலாங்கரை பகுதியிலுள்ள முருகன் என்பவர் பழம், இளநீர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.

அவர் வண்டி பழுதடைந்து விட்டதால் வியாபாரம் செய்ய கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார். இது விஜய் கவனத்திற்கு சென்ற உடன் உடனடியாக வியாபாரம் செய்ய தேவையான மூன்று சக்கர வண்டியை தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்தார். முருகனிடம் வியாபாரம் எப்படி நடக்கிறது? என்று கேட்டு விசாரித்து வண்டியை வழங்கினார். 


Post your comment





Related News
விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions