விஜய் 59 தலைப்பு வெற்றி?

Bookmark and Share

விஜய் 59 தலைப்பு வெற்றி?

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து அட்லீ இயக்கும் படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து விரைவில் கோவாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் தலைப்பாக முதலில் ‘காக்கி’ என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், ‘வாய்மை’ இயக்குநர் செந்தில்குமார் இந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை செந்தில்குமார் எந்தவித பதிலும் அளிக்கவில்லையாம்.

இதனால் வெறுத்த அட்லீ மற்றும் விஜய் வேறு தலைப்பை யோசிக்க ஆரம்பித்துள்ளனர். அதில் இவர்கள் இரண்டு தலைப்பை முடிவு செய்துள்ளனர். ஒன்று தர்மம் இன்னொன்று ‘வெற்றி’ ஆகிய பெயர்கள் தற்போது பரிசீலனையில் இருக்கிறது.

‘காக்கி’ தலைப்புக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால், அனேகமாக ‘வெற்றி’ தான் தலைப்பு என்று முடிவு செய்திருக்கிறார்களாம். தலைப்பை இறுதி செய்து தீபாவளி அன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions