பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?

Bookmark and Share

பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?

இந்நிலையில் தமிழ்நாடு பால்முகவர் நலச்சங்கத் தலைவர் சு.ஆர்.பொன்னுசாமி அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தைப் பர்த்ததும் அதிர்ந்துபோனோம்.

விஜய் நடித்து வெளியான தெறி முதல் நாள் ரிலீஸில், ரசிகர்கள் திரையரங்கிற்கு அருகில் இருக்கும் பால்முகவர்களின் கடைகளிலிருந்து பாலைத் திருடிக்கொண்டுபோய், கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்திருப்பதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அன்றாட உயிர்காக்கும் அத்தியாவசிய பொருளான பாலை வீணடிப்பது மட்டுமல்லாமல், பால் முகவர்களின் வருமானமும் ரசிகர்களால் பாதிக்கப்படுகிறது பற்றி நம்மிடம் பேசினார் பொன்னுசாமி.

“தமிழகத்துல மட்டும் 15% சதவீதம் பேர் பால் வாங்கவே முடியாதளவுக்கு வறுமையில் இருக்காங்க. ஆனா ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போதும், கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வதற்காக ரசிகர்கள், பாலை திருடிட்டுப் போய்டுறாங்க. என்று ஆரம்பித்தவர் தெறி படம் ரிலீஸன்று என்ன நடந்தது என்பதையும் விளக்கினார். 

“நள்ளிரவு 1 மணிக்கு, கம்பெனிகாரங்க, பாலை கடைக்கு வெளியே இறக்கிவச்சிட்டுப் போய்டுவாங்க, நாங்க, 3 மணிக்குத்தான் பாலை கடைகளுக்கு விநியோகம் செய்யப் போவோம், ஆனா இந்த இடைப்பட்ட நேரத்துல ரசிகர்கள் பாலை திருடிட்டுப் போய்ட்டாங்க. தெறி படம் ரிலீஸான நேரத்துல, கோயம்புத்தார் பக்கத்துல பால் முகவர் கடைகளுக்கு முன்பு இறக்கிவைக்கப்பட்டிருந்த 200-300 லிட்டர் பால் வரைக்கும், பாலபிஷேகம் செய்யனு எடுத்துட்டுப் போய்ட்டாங்க.

 


Post your comment





Related News
2 வருடம் கழித்து 'சனம் ஷெட்டி'யை தேடிவந்த மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம்..!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
வைபவியை தாய்லாந்து அழைத்து செல்லும் கௌதம் கார்த்திக்
அடேங்கப்பா.. ரசிகர்கள் வைத்த மெர்சல் கட் அவுட்டுக்கே இவ்வளவு லட்சம் செலவா?
இன்னொரு 'மௌனராகம்' உருவாகுமா? - மிஸ்டர் சந்திரமௌலி!
மெர்சல் மன்னன் விஜய்க்கு யூ ட்யூப் கொடுத்த புது பட்டம், தெறிக்க விடும் ரசிகர்கள்.!
சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions